dhanush fans death in thoothukudy police attack
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், இதுவரை பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த போராட்டத்தில் ஏற்கனவே, கோலிவுட் திரையுலகின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர்களில் ஒருவரான ஸ்டண்ட் சில்வாவின் தங்கை கணவர் இறந்தார்.
இந்நிலையில் தற்போது இதே போராட்டத்தில், நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளில், ஒருவர் இறந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. ஈடு செய்யமுடியாத ரசிகரின் இழப்பு குறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளது....
துப்பாக்கி சூட்டில், என் நற்பணி மன்ற தம்பி S.ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
