பல பிரபலங்களுக்கு, தமிழ் சினிமாவில் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் பல முறை சமூக வலைதளத்தில் மட்டும் இல்லை நேரிலும் மோதிக்கொண்டு பிரச்சனைகள் வெடிக்கும். ஆனால் சமீப காலமாக வலைத்தளத்தில் மட்டுமே மோதிக்கொண்ட இவர்கள் நேரில் மோதலில் ஈடுபடாமல் இருந்தனர்,

தனுஷ் பேனரை கிழித்ததால் வெடித்த பிரச்சனை: 

இந்நிலையில் சென்னை பட்டாபிராமில் நடிகர் தனுஷ்க்காக அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரை அந்த வழியாக வந்த, மற்ற நடிகரின் ரசிகர்கள் கிழித்ததாக தெரிகிறது. 

அடிதடி:

இதனால் மிகவும் கோவமான தனுஷ் ரசிகர்கள், பேனரை கிழித்தவர்களை அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.

இந்த அடிதடி பிரச்சனையில், 6 பேருக்கு கடுமையான வெட்டு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த 6 நபர்களை தாக்கியவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.