Asianet News TamilAsianet News Tamil

Dhanush Telugu movie : டோலிவுட் என்ட்ரியை உறுதிசெய்த தனுஷ்... இயக்குனர் மாற்றப்பட்டதால் ரசிகர்கள் குழப்பம்

நடிகர் தனுஷ் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய தமிழ் படங்களும், அட்ரங்கி ரே என்கிற பாலிவுட் படமும், தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படமும் உள்ளது. 

Dhanush announced his Telugu Debut movie with venky atluri
Author
Tamil Nadu, First Published Dec 22, 2021, 6:53 PM IST

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

Dhanush announced his Telugu Debut movie with venky atluri

எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். 

தற்போது இவர் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய தமிழ் படங்களும், அட்ரங்கி ரே என்கிற பாலிவுட் படமும், தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படமும் உள்ளது. இதுதவிர அவர் விரைவில் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

Dhanush announced his Telugu Debut movie with venky atluri

முதலில் அவர் தெலுங்கில் அறிமுகமாக உள்ள படத்தை சேகர் கம்முலா இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெங்கி அட்லூரி இயக்கும் படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 9:36 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதனால் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட படம் என்ன ஆனது என ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios