சௌந்தர்யா தற்போது தன் சொந்த பிரச்னையில் இருந்து மெல்ல மெல்ல விலகி வருகிறார்.
விவாகரத்து என்பது தன் தனிப்பட்ட உரிமை என கூறி சமாதானம் செய்ய முன்வந்த அனைவரையும் பேச விடாமல் இந்த விஷயத்திற்கு முற்று புள்ளி வைத்தார்.
இந்நிலையில் இவர் இன்று, தனுஷுடன் மும்பை சென்றுள்ளார், இதற்கு காரணம் சௌந்தர்யா விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
அந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் தான் நடிக்கிறார் , இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றார்களா? அல்லது வேறு எதாவது நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்களா? என தெரியவில்லை.
மேலும், சௌந்தர்யா இயக்கும் படத்தில் சோனம் கபூரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
