Asianet News TamilAsianet News Tamil

முடிவுக்கு வந்துவிட்டதா பிரச்சனை? ஏழு வருடத்திற்கு பின் தனுஷுடன் இணையும் பிரபலம்!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாரி 2 ' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவோடு அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.

dhanush and gv prakash join in asuran movie
Author
Chennai, First Published Dec 26, 2018, 5:16 PM IST

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாரி 2 ' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவோடு அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவிருக்கும் 'அசுரன்' படத்தின் போஸ்டர் வெளியாகி தனுஷ் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார்.

dhanush and gv prakash join in asuran movie

இந்த படத்திற்கு பேட்ட படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர், அனிருத் தான் அசுரன் படத்திற்கும் இசை அமைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,  தற்போது பிரபல இசை அமைப்பாளர் ஒருவரின் பெயர் பரவலாக அடிபட்டு வருகிறது.

dhanush and gv prakash join in asuran movie

அவர் வேறு யாரும் இல்லை,  நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தான். ஏற்கனவே தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் காம்பினேஷனில் வெளியான, பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்.  இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட,  மனக்கசப்பு காரணமாக கடந்த 7  வருடங்களாக இருவரும் இணையாமல் இருந்தனர்.

dhanush and gv prakash join in asuran movie

தற்போது இவர்களுடைய பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.  இதனால் ஏழு வருடத்திற்கு பின் தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால் இதுகுறித்து படக்குழுவினரிடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios