ஐஸ்வர்யா ராஜேசுக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம்! தனுஷ் அட்டகாசம்!
வடசென்னை படத்திற்காக, ஐஸ்வர்யா ராஜேஷ் உதட்டை தனுஷ் கவ்விப்பிடித்து முத்தம் கொடுக்கும் நெருக்கமான காட்சிபடமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நடிகர் தனுஷ் வடசென்னை என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படம், 2 பாகங்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், சமுத்திரகனி, கிஷோர், டேனியல் பாலாஜி, அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.விசயம் இதுவல்ல.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தனுஷ் இடையே உள்ள உதட்டு முத்தக்காட்சிதான். இதுபோன்ற காட்சிகளில் தனுஷ்அதிகம் நடிப்பதில்லை. நடிக்க வந்த புதிதில் இப்படி நடித்தாலும், பின்னர் நேரடியான முத்த காட்சிகளில் அதிகம்பங்கேற்காமலேயே அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், வடசென்னை படத்தின் முக்கியத்துவம் கருதி, அவர் ஐஸ்வர்யா உதட்டை கவ்விப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு காட்சி வைத்தால், பொதுவாக, சென்சார் போர்டில் ஏ சான்றிதழ் தரப்படும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட காட்சியைநீக்க சொல்வார்கள். ஆனால், வடசென்னை படத்திற்கு, யு சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இது இயக்குனர் வெற்றிமாறனின் கதைக்கு கிடைத்த வெற்றி என்றும், காதலின் மகத்துவம் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.