இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு பனோரமா விருதுகளை வழங்கி கௌரவித்து வரும் நிலையில், இந்த ஆண்டிற்கான மத்திய அரசு விருது, அசுரன் படத்திற்கும், 'தாயன்' என்கிற படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், சிறந்த படங்களை தேர்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும், பனோராமா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த வருடம் தமிழில் இரண்டு படங்கள் மத்திய அரசின் இந்த விருதை கைப்பற்றியுள்ளது. ஒன்று இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த 'அசுரன்' படம். மற்றொன்று, கணேஷ் விநாயக் இயக்கிய, 'தாயன்' என்கிற படம் தேர்வாகியுள்ளது.

இப்படங்கள், கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.