கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், தான் நடித்த 3 படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளாராம்.

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். 

தற்போது இவர் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய தமிழ் படங்களும், அட்ரங்கி ரே என்கிற பாலிவுட் படமும், தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படமும் உள்ளது. இவற்றுள் மாறன், அட்ரங்கி ரே, தி கிரே மேன் ஆகிய 3 படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன. 

இந்த 3 படங்களும் விரைவில் ரிலீசாக உள்ள தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், அந்த 3 படங்களும் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக பரவும் தகவல் அவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகர் சூர்யா தான் தயாரித்த 4 படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டார், அதில் அவர் 2 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது நடிகர் தனுஷும் சூர்யாவைப் போல் ஓடிடி வலையில் சிக்கி உள்ளார்.