நடிகை ஸ்ரீதேவி கடந்த வருடம் குடும்ப நண்பர் திருமணத்திற்காக துபாய் சென்றபோது, பாத் டப்பில் மூழ்கி மரணமடைந்தார். இவருடைய மரணம் ஒட்டு மொத்த தென்னிந்திய திரையுலகினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் தற்போது ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி முதல் முறையாக கதாநாயகியாக நடித்திருக்கும், 'தடாக்' திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. 

காதல் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஜான்வியின் நடிப்பு வெகுவாக அனைவரையும் கவர்ந்திருந்தாலும், இவருடைய நடிப்பை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பேசி வந்தனர்.

மேலும் ஸ்ரீதேவிக்கு இணையாக இவரால் நடிக்க முடியவில்லை என்று பலர் விமர்சித்தால், கண் கலங்கி விட்டாராம் ஜான்வி.

தற்போது இதுகுறித்து பேசியுள்ள, போனி கபூர் "எது நடக்க கூடாது என நானும், ஸ்ரீதேவியும் பயந்தோமோ அது நடந்து விட்டது. ரசிகர்கள் பலர் தற்போது ஜான்வியை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு விமர்சித்து பேசுகிறார்கள். சிலர் இவரால் ஸ்ரீதேவி அளவிற்கு நடிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார்கள்". 

படம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும், அம்மாவின் பெயரை கெடுத்து விட்டோமே என்கிற குற்ற உணர்வு ஜான்வியை அழவைத்துள்ளது. 

ஆனால் ஸ்ரீதேவி இன்று இருந்திருந்தால், இது போல் நடந்திருக்காது. எனவே ரசிகர்கள் யாரும் ஸ்ரீதேவி நடிப்புடன் ஜான்வியை நடிப்பை ஒப்பிட்டு பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.