Asianet News TamilAsianet News Tamil

’சாமி சத்தியமா உங்க படத்து பேய் சத்தியமா அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல பாஸ்’...’தேவி 2’ படப்பஞ்சாயத்து...

‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய் விரைவில் துவங்கவிருக்கும் ஜெயலலிதாவின் சுயசரிதை படத்துக்காக நடிகை கங்கனா ரனாவத் தனது உடல் எடையை முதலில் 10 கிலோ குறைத்து அடுத்து 20 கிலோவுக்கும் மேல் ஏற்றவிருப்பதாகத் தெரிவிக்கிறார்.
 

devi 2 director a.l.vijay interview
Author
Chennai, First Published Jun 1, 2019, 2:36 PM IST

‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய் விரைவில் துவங்கவிருக்கும் ஜெயலலிதாவின் சுயசரிதை படத்துக்காக நடிகை கங்கனா ரனாவத் தனது உடல் எடையை முதலில் 10 கிலோ குறைத்து அடுத்து 20 கிலோவுக்கும் மேல் ஏற்றவிருப்பதாகத் தெரிவிக்கிறார்.devi 2 director a.l.vijay interview

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடித்த ’தேவி-2’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பத்திரிகையாளர் காட்சியில் கலந்துகொள்ள வந்திருந்த விஜய் நிருபர்களிடம் உரையாடினார். அப்போது பேசிய அவர்,”பிரபுதேவா, தமன்னாவை வைத்து நான் இயக்கிய ’தேவி2’ படம் நன்றாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தேன். ஒரு மனிதருக்குள் இரண்டு பேய்கள் புகுந்து ஆட்டி படைப்பதுபோல் திரைக்கதை அமைத்தேன். இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தால் தேவி 3-ம் பாகம் எடுப்பேன்.[சாமி சத்தியமா, அந்த பிரபுதேவா மேல வந்த பேய் சத்தியமா அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல சார்]

தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் பணிகள் நடந்து தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். இதில் ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யாராய், வித்யாபாலன், கங்கனா ரணாவத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம்.devi 2 director a.l.vijay interview

ஜெயலலிதா தனது 16-வது வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். எனவே அவரது 16 வயதில் இருந்து கதை ஆரம்பிக்கும். அந்த இளம் வயது ஜெயலலிதா வேடத்துக்காக கங்கனா ரணாவத் தனது உடல் எடையை சுமார் 10 கிலோ  குறைத்தும் அவர் முதல்வர் ஆகும் சமயம் 20 கிலோ எடை கூட்டியும்  நடிக்கிறார். படத்துக்காக அவர் தமிழ் கற்றும் வருகிறார். இந்த படம் முடிய ஒன்றரை வருடம் ஆகும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் ஜெயித்து அந்த ஆண்களை எப்படி ஆதிக்கம் செய்தார் என்பதே படத்தின் கருவாக இருக்கும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios