devarmagan filck first got the chance to act aishwarya

1992 ஆம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமலஹாசன், ரேவதி, கௌதமி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'தேவர்மகன்'. 

இந்த திரைப்படம், இப்போதும் பல ரசிகர்களால் ரசிக்க கூடிய திரைப்படமாக இருந்து வருகிறது. மேலும் இந்தியத் தேசிய திரைப்பட விருதினை 1993 ஆம் ஆண்டு பெற்றது. அதேபோல் இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பல விருதுகளையும் வாரிக்குவித்த இந்த படத்தில் சக்திவேல்லாக நடித்த, கமலஹாசனுக்கு காதலியாக நடித்திருந்தவர் நடிகை கௌதமி. 

உண்மை காதலர்கள் போலவே மிகவும் எதார்த்தமாக இவர்களுடைய நடிப்பு அமைந்திருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் உண்மையாகவே காதலிப்பதாகவும் ஒரு சில கிசுகிசுக்கள் எழுந்தது. 

தற்போது இந்த படத்தில் கௌதமி நடிக்க இருந்த காதப்பாத்திரத்தில், முதலில் நடிக்க இருந்த நடிகை யார் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லைங்க... பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா தானாம். கால்ஷீட் பிரச்சனை காரணமாக நாயகியை மாற்றிவிட்டார்களாம். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.