ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் தாயார், கரீமா பேகம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதற்கு பலர் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் தாயார், கரீமா பேகம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதற்கு பலர் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசையின் நாயகனாக வலம் வரும், ஏ.ஆர்.ரகுமான் என்கிற மாணிக்கத்தை, பெற்றெடுத்த அன்பு தாய் கரீமா பேகம் சமீப காலமாகவே, வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். இதனை ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் உறுதி செய்தார்.
இதை தொடர்ந்து ஆஸ்க்கார் நாயகன் அம்மாவிற்கு, ரசிகர்கள், பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் தற்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை ஏ.ஆர்.ரகுமானுக்கு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இவர் போட்டுள்ள ட்விட்டரில்... "இசையமைப்பாளர் திரு.A.R.ரஹ்மான் அவர்களின் தாயார் திருமதி.கரீமா பேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமது அன்புத்தாயாரை இழந்துவாடும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் திரு.A.R.ரஹ்மான் அவர்களின் தாயார் திருமதி.கரீமா பேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமது அன்புத்தாயாரை இழந்துவாடும் @arrahman அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/koWbxAqLiy
— O Panneerselvam (@OfficeOfOPS) December 28, 2020
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 28, 2020, 5:19 PM IST