பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 70 நாட்களை கடந்து விட்டது. எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும்,  தற்போது அவர்களுடைய குடும்பத்தை மிகவும் மிஸ் செய்ய துவங்கியுள்ளனர். இவர்களில் இந்த ஆசையை நிறைவு செய்யும் விதத்தில் பிரீஸ் டாஸ்க் கொடுத்து சில நிமிடம் அனைத்து போட்டியாலருக்கும் நெருக்கமானவர்களை பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் உள்ளே அனுப்பி வருகிறார்கள். இதனால் போட்டியாளர்கள் அனைவருக்கும் இந்த டாஸ்க் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், டேனியின் காதலி மற்றும் அவருடைய அம்மா பிக்பாஸ் வீட்டின் உள்ளே வருகிறார்கள். இவர்கள் வரும் நேரம் டேனி பிரீஸ் டாஸ்க்கில் இருப்பதால், அவரால் எழுந்து செல்ல முடியவில்வில்லை. 

அவர்கள் வெளியில் போக தயாராவதால், பிக்பாஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என டேனி கெஞ்சுகிறார். திடீர் என இவர் விடுவிக்கப்பட்டதும். ஓடி சென்று தன்னுடைய காதலியை கட்டி அணைத்து தூக்குகிறார். இதன் மூலம் இவருடைய காதல் எந்த அளவிற்கு ஆழமானது என்பது பார்க்கும் ரசிகர்களுக்கே புரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இதை தொடர்ந்து ப்ரோமோவில் பாலாஜி மற்றும் மும்தாஜ் பேசும் காட்சி காட்டப்படுகிறது. இதில் பாலாஜி ஜனனி மற்ற போட்டியாளர்கள் வீட்டில் இருந்து யாராவது வந்தால் அவர்களிடம் பெரிதாக அட்டாச்மென்ட் காட்ட வில்லை என கூறுகிறார். இதை பார்ப்பதற்கு தனக்கே மிகவும் சங்கட்டமாக இருப்பதாகவும். போலி கண்ணீருக்கும் நீலி கண்ணீருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாக கூறுகிறார்.

இவர் கூறுவது ஜனனியை தான் என தெளிவாக தெரிந்தாலும், ஜனனி அப்படி என்ன செய்தார். என இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரிய வரும். மேலும் பாலாஜி இப்படி கூறுவதால், பெரிய பிரச்சனை வெடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் சில வாரங்களாகவே சண்டையில் தானே போகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.