பாலியல் தொல்லைக்கு ஆளான தெய்வமகள் சத்யா...!

தெய்வமகள் சீரியலில் வரும் வரும் சத்யா(வாணி போஜன்) அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அந்த வகையில் சீரியல் நாயகி தேவமகள் சத்யா மக்கள் மனதில் பெருத்த இடத்தை பிடித்துள்ளார்

பட கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பது போலவே,சீரியல் கதாநாயகிகளுக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர்.

பொதுவாகவே கதாநாயகிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றனர் என்ற செய்தியை அடிக்கடி பார்க்க முடிகிறது அல்லவா....? அந்த வரிசையில் தற்போது தேவமகள் சத்யாவும் இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் உடைத்து பேசுவேன் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட   சத்யா பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை பற்றி பேசினார்.

அப்போது...."நான் 4 ஆம் வகுப்பு படிக்கும் போது,என்னுடைய தோழியின் வீட்டிற்கு சென்றேன்...அப்போது,என் தோழியின் தந்தை உன் தோழி மாடியில் இருக்கிறார் என என்னிடம் கூறினார்...நான் மேலே சென்று பார்த்த போது, அவனது அறையை பூட்டிக்கொண்டார்....பின்னர் தொல்லை  கொடுக்க முற்பட்டார் என தெரிவித்து உள்ளார்.

இந்த விஷயத்தை தான் தன் தோழியிடம் சொல்லவில்லை என்றும்,  சொல்லி இருந்தால் அவள் என்ன செய்திருப்பாள் என்று எனக்கு தெரியவில்லை என தேவமகள் சத்யா தெரிவித்து உள்ளளர்.