'பத்மாவத்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'கோச்சடையான்' என மாடர்ன் கதாபாத்திரமாக இருந்தாலும், குடும்ப பாங்கான கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதில் ஒன்றி நடிப்பவர் நடிகை தீபிகா படுகோனே. 

இந்நிலையில் இவர் புதிதாக நடிக்கும் திரைப்படம் சபாக். டெல்லி ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இதில் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார்.  

இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.  இந்த வருடம் இறுதியில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.  

இந்த படத்தில் நடிப்பது குறித்து தீபிகா படுகோனே, அளித்த பேட்டியில்... " எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் சிறந்த படமாக இது இருக்கும்.  எனது ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆயிரம் கண்களுடன், காத்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல எனது கணவர் ரன்வீர் சிங்கும் இந்த அற்புதமான படத்தை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை என்றார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டது போல் மேக்கப் போட மட்டும் பல மணி நேரம் ஒதுக்கவேண்டி இருந்தது என தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.