பிரபல பாலிவுட் நாடிகை தீபிகா படுகோன் 30 வயதை கடந்த பின்பும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார். இவரும் பிரபல நடிகர் ரன்பீரும் காதலித்து வந்தாக பல தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இது குறித்து எந்த தீபிகா மற்றும் ரன்பீர் இருவரும் எதையுமே வெளியே கூறியது இல்லை.

ஆனால் இவர்களுடைய காதல் சில காலம் மட்டுமே நிலைத்து. பின் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுடைய காதல் முறிந்து விட்டது.

இதுகுறித்து தற்போது கூறியுள்ள நடிகை தீபிகா படுகோன்...."நானும் ரன்பீரும் காதலித்து உண்மை தான், ஆனால் இப்போது நண்பர்களாக கூட பழகவில்லை". உடைந்ததை ஒட்டவைப்பது முடியாத காரியம் என்ற கருத்தில் நன் உறுதியாக இருக்கிறேன். 

மேலும் விரைவில் நடைபெற இருக்கும் 'மிஜ்வான் - 2018' ஃபேஷன் ஷோவில் கலந்துக்கொள்ள உள்ளோம். இந்த நிகழ்ச்சியில் நான் ரன்பீருடன் ஜோடி சேர்ந்தாலும் அதில் எந்த விதமான உள் அர்த்தமும் இருக்காது என்பதை தெளிவு படுத்த விரும்புவதாக கூறியுள்ளார். 

தற்போது தீபிகா படுகோனே பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார் என்றும் இவர்களுடைய திருமணம் அடுத்த வருடம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.