பரதன் இயக்கத்தில், இளையதளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'பைரவா' படத்தின் டீசர் வரும் தீபாவளியன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது .
ஆனால் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் இதுவரைகும் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் 'பைரவா' படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று வரும் தீபாவளி தினத்தில் அதிகாலை 12 மணிக்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு டீசர் வருமா வராதா என எதிர் பார்த்த ரசிகர்களுக்கு விஜய் பாடல் மூலம் பட்டையை கிளப்ப வருவது குஷியை ஏற்படுத்தியுள்ளது.
