இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் சிங்கம்-3 இந்த படத்தில் நாயகிகளாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் அவசர அவசரமாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் சூர்யாவின் ரசிகர்களுக்காக தீபாவளிக்கு வரும் என முன்பு கூறினார்கள், ஆனால், தற்போது படத்தின் டீசர் வெளியிடும் ஐடியா இல்லையாம் .

இந்த விஷயம் சூர்யா ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது, எனினும் தற்போது சிங்கம்-3 மோஷன் போஸ்டர் ஒன்றை தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.