கலகலப்பான பேச்சு, துருதுரு செய்கையால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் சின்னத்திரை தொகுப்பாளி டிடி. தற்போது இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதையும் தாண்டி தன்னுடைய கவனத்தை, மாடலிங், திரைப்படங்கள் நடிப்பது போன்ற வற்றிலும் திருப்பி இருக்கிறார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ பலரையும் ஆச்சர்யப்படுதியுள்ளது. இந்த வீடியோவில் பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேரள மாநில வெள்ளத்திற்கு நிவாரண நிதி வழங்குவதாக கூறும் வீடியோ தான் அது. 

வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா மாநிலத்திற்கு உலகமெங்கும் உள்ள மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் "நாங்களும் உதவிகள் செய்வோம்... என்று கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர் பாக்கிஸ்தான் இளைஞர்கள் சிலர். 

கேரளாவின் துயரை துடைக்க பாகிஸ்தானியர்கள் தங்களுக்கு முடிந்த விஷயத்தை செய்வதாக கூறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.