dd going to take a interviewq with actor surya
டிடியும் - சூர்யாவும்...! விரைவில்.....
பொங்கலை முன்னிட்டு நடிகர் சூர்யா நடித்த தானே சேர்ந்த கூட்டம் படம் இன்று திரைக்கு வந்து மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
இது குறித்து பல விமர்சனங்கள் வெளிவரும் நிலையில்,ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக பிரபல தொகுப்பாளினி டிடி நடிகர் சூர்யாவை பேட்டி எடுக்க உள்ளார்.
அதாவது, தமிழ் திரை உலகில் நடிகை நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்களை போலவே, தொகுப்பாளினி டிடி க்கும் அதிகமான அளவில் ரசிகர்கள் இருகின்றனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளாகவே தொலைக்காட்சிகளில் முகம் காண்பிக்காமல் இருந்த டிடி, சூர்யா மூலமாக மீண்டும் திரைக்கு வர உள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் சின்னத்திரையில் ஜொலிக்க வரப்போகிறார்.இந்த நிகழ்ச்சியை காண சூர்யா ரசிகர்கள் ஒரு பக்கம் மறுபக்கம் டிடி ரசிகர்கள் என ஆவலாக காத்திருகின்றனர்.
மேலும் விவாகரத்து குறித்து முதல் முறையாக வாய் திறந்த டி டி, விவாகரத்திற்கு காரணம் அவர் மட்டும் அல்ல, நாங்கள் இருவருமே பேசி முடிவு செய்த விஷயம் தான்... இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதன் காரணமாக இருவரும் பேசி பிரிந்துவிட முடிவு செய்து விட்டோம் என தெரிவித்து உள்ளார்.
