மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும், நடித்து பிரபலமானவர் கல்பனா.

இவர் தமிழில் இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய சின்னவீடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.  இதைத்தொடர்ந்து, 'திருமதி ஒரு வெகுமதி',  'சிந்து நதி பூ ' 'சதிலீலாவதி',  'லூட்டி', 'டும் டும் டும்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகை ஊர்வசியின் சகோதரியும் ஆவார். 1998 இல் அணில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் 2012ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.  இவர்களுக்கு ஸ்ரீமயி என்கிற ஒரு மகளும் உள்ளார். 

கல்பனா படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்ற போது, திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். 

இவரின் மகள் ஸ்ரீமயி தற்போது, சித்தி ஊர்வசி பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்.  பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் இவர், படிப்பை முடிக்கும் முன்னனே ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்து ஸ்ரீமயி கூறுகையில்,  தன்னுடைய தாத்தா, பாட்டி, அம்மா, சித்தி, பெரியம்மா, அம்மா என அனைவருமே நடிகர்கள்.  குடும்பமே சினிமா துறையில் இருப்பதால் நானும் இதே துறையில் நடிக்க வருவேன் என சற்றும் எதிரிபார்க்கவில்லை.

சிறுவயதில் ஃபேஷன் டிரஸ் காம்படிஷனில் கூட கலந்து கொள்ள மாட்டேன். அவ்வளவு கூச்ச சுபாவம் எனக்கு.  இருப்பினும் என் அம்மாவிற்கு நான் ஒரு நடிகையாக ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்து. இதனை ஒரு முறை கூட அவர் என்னிடம் சொல்லாமல் மூடி மறைத்து விட்டார். ஆனால் பாட்டியிடம் மட்டும் அவருடைய ஆசையை கூறியுள்ளார்.

எனவே நான் நடிகையாக ஆவதால், அம்மாவின் கனவு நனவாக போகிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஸ்ரீமயி.

மேலும் சினிமா வாய்ப்பு மிகக் குறுகிய காலத்திலேயே எனக்கு கிடைத்துள்ளது. சினிமா பயணத்தில் அம்மா, சித்தியை போல் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். சினிமாவில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மிகவும் அர்ப்பணிப்போடு நடித்தால்தான் வெற்றிபெற முடியும் என ஸ்ரீமயி மேலும் கூறியுள்ளார்.