daughter of famous actress blessed with baby
திரைத்துறையில் பிரபல நடிகை ராதிகா சரத்குமார் .இவர் தற்போது விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக வரபோகும் சீரியல் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார். நடிப்பு, தயாரிப்பு என பன்முகம் கொண்டு எப்போதும் பிஸியாக இருக்கும் இவரை, மேலும் பிஸியாக்க அவரது வீட்டிற்கு ஒரு புது வரவு வந்திருக்கிறது

ராதிகா சரத்குமாரின் முத்த மகள் ரேயன். ரேயனுக்கும், அபிமன்யூ மிதுன் என்பவருக்கும், சென்ற ஆண்டு திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து தான் பாட்டியாக இருக்கும் நல்ல செய்தியை, தனது ரசிகர்களிடம் சமீபத்தில் பகிர்ந்திருந்தார் ராதிகா சரத்குமார்.
So so so happy, god bless🎉🎉🎉🎉💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/Ns8UP36Lja
— Radikaa Sarathkumar (@realradikaa) June 7, 2018
இன்று ரேயனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது .இந்த சந்தோஷமான செய்தியை ராதிகா சரத்குமார், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ரேயனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை தெரிவித்த அவர், கடவுளுக்கு நன்றி என அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.
