பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி, நிச்சயதார்த்தமும் செய்து விட்டு தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக நேற்று கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம்ஷெட்டி புகார் கொடுத்திருந்தார்.  

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தர்ஷன், ‘’சனம்ஷெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சனம் ஷெட்டியின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. என்னை அவர் டார்ச்சர் செய்து வந்தார். நான் எங்கே போனாலும் தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். அதேபோல் நான் நடிக்க ஒப்பந்தமான படத்தில் நாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்யும்படி வற்புறுத்தினார். 

இதனை எல்லாம் பார்த்துதான் அவருக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்ற முடிவை தான் எடுத்ததேன். திருமண நிச்சயதார்த்தம் குறித்து இலங்கை சென்று என்னுடைய தாயாரை சனம் ஷெட்டி சந்தித்தார். அப்போது என்னுடைய தாயார் ’நீங்கள் இருவரும் உண்மையாகவே காதலித்தீர்கள் என்றால் உங்கள் திருமணத்தை நடத்தி வைக்க தயார். தர்ஷனின் தங்கை திருமணம் முடிந்தவுடன் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எனக் கூறி இருக்கிறார்.  

நான் நடிக்க ஒப்பந்தமான படத்தின் தயாரிப்பாளர்களிடம் சனம் ஷெட்டி சென்று என்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று கூறி வந்திருக்கிறார்.  இதனால் தான் அவரை தவிர்க்க முடிவு செய்தேன். சனம் ஷெட்டியிடம் மூன்றரை லட்சம் ரூபாய் மட்டும் வாங்கினேன். அந்த பணத்தையும் பிக்பாஸ் பணம் வந்தவுடன் கொடுத்து விட்டேன். மற்றபடி அவரிடம் எந்த பணமும் பெறவில்லை’’எனத் தெரிவித்தார். ஆக மொத்தத்தில் இருவரும் இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அவர்களது நட்பு வட்டாரத்தினர்.