வெள்ளித்திரையில் மண்வாசனை பரப்பிய பாரதிராஜாவுக்கு வெகுகாலமாக தமிழ் திரையுலகம் முதல்மரியாதை கொடுத்து வந்தது. தற்போது சுமார் மரியாதை கூட இல்லை டிஸ்ட்ரிபியூட்டர் வட்டாரத்தில் நிறம் மாறிய பூக்களாக்கி விட்டனர்.

திரைக்கு வந்து 43 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் அவர் தயாரித்து இயக்கி அவரே ஹீரோவாக நடித்த ‘ஓம்’படத்தின் தலைப்பை மாற்றப் போகிறாராம். பல பல பெயர்களை எழுதி எழுதி அடித்துக் கொண்டிருக்கிறது அவரது குழு. இதற்கிடையில் ‘உங்க படத்தை வெளியிடுவது எங்க பொறுப்பு’ என்று சொல்லிச் சொல்லியே ஏமாற்றிய லைகா நிறுவனம், அவரை தன் சம்பந்தப்பட்ட பட விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த நினைத்தது.

ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட இயக்குநர் இமயம், ‘போங்கய்யா நீங்களும் உங்க அழைப்பும்...’என்று கதவடைத்து விட்டார். தர்பார் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தும் போகாமலிருந்த காரணமும் இதுதானாம். போனால் மட்டும் சும்மாயிருப்பாரா? யாரையாவது வம்புக்கு இழுத்து தர்பாரை தொடங்கி வைத்து இருப்பார்.