இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் நாளை, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு (ஜனவரி 9 ) மிக பிரமாண்டமாக வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலமாக மிரட்டியுள்ளதை பார்க்க ரஜினி ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளது கூடுதல் சிறப்பு. நயன்தாரா சிங்கிளாக நடித்தாலே பெரிய பெரிய கட் அவுட் வைத்து அதகள படுத்தும் ரசிகர்களுக்கு, இரண்டு ஸ்டார்களும் இணைந்து நடித்தால் சொல்லவா வேண்டும்...  நாளை தாரா... தப்பட்டைகளை கிழித்து தொங்கவிட இப்போதே தயார் ஆகி விட்டனர் ரசிகர்கள்.

அதே போல் படத்தின் புரொமோஷனும், விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. சேலத்தில் உள்ள ரசிகர்களோ... தலைவரின் கட்டவுட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் பூ தூவ... அனுமதில் கேட்டு போராடி வருகிறார்கள். ஆனால் தற்போது வரை தொடர்ந்து மாநகராட்சி இவர்களுக்கு அனுமதி தரவில்லை என்றே கூறப்படுகிறது.

இப்படி பல்வேறு பரபரப்பு... ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிக்கெட் விலை, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வைத்து விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில்... பெங்களூரு திரையரங்கம் ஒன்றில், ஒரு டிக்கெட் விலை ரூபாய் 1700 -க்கு விற்கப்படுவதாகவும், விலை கூடுதலாக விற்றாலும், தலைவரின் படத்தை பார்த்தே தீருவோம் என சில ரசிகர்கள் கூடுதல் பணம் கொடுத்து வாங்கி சொல்கிறார்களாம். சிலருக்கோ டிக்கெட் விலையை கேட்டாலே தலை சுற்றலே வந்து விடுகிறது என்று தான் கூறவேண்டும்.