ஜனவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'தர்பார்'. இப்படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இந்த படத்தின் வசூலை, குறைப்பதற்காகவே சிலர், பல்வேறு சதி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, 'தர்பார்' படத்தை சமூக வலைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர் வாட்ஸ்ஆப் போன்றவற்றில் ஷேர் செய்து, யாரும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டாம் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை சேர்த்தவர்கள் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

இந்நிலையில், மதுரையில் இயக்கி வரும் லோக்கல் சேனல் ஒன்றில் 'தர்பார்' திரைப்படம் ஒளிபரப்பாகி உள்ளது. ரஜினி மன்றத்தை சேர்த்தவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபின், இந்த கேபிள் டிவி ஆப்பரேட்டரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

'தர்பார்' படத்தை லோக்கல் சேனலில் வெளியிட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.