ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள படம் "தர்பார்" பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 9ம்  தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் சூப்பர் காப் ஆக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதால், அவரது அதிரடி ஆக்‌ஷன் பிளாக்கை பார்க்க ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான "தர்பார்" படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர், பாடல் என அனைத்தும் சோசியல் மீடியாவில் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில் "தர்பார்" படம் குறித்து நாளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு படக்குழுவினர் ரஜினி ரசிகர்களை குஷியாக்கி வருகின்றனர். அந்த வகையில், இன்று சரியாக 6 மணி அளவில், 'தர்பார்' படத்தில் இடம் பெற்றுள்ள 'டும் டும்' பாடலின் செகண்ட் சிங்கள் வெளியாக உள்ளதாக போஸ் வெளியிட்டு உறுதி செய்திருந்தனர். 

அதன்படி சரியான நேரத்திற்கு "தர்பார்" படத்தின் செகண்ட் சிங்கிளான டும்,டும்,டும் பாடல் வெளியிடப்பட்டது. கல்யாண வீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடுவது போல உள்ள அந்த பாடல் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அந்த பாடலில் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் உள்ளார். ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான சும்மா கிழி பாடல் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இந்த பாடலும் மாஸ் காட்டி வருகிறது. மேலும் #DummDumm என்ற ஹேஷ்டேக்கையும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

எங் லுக்கில் நம்ம சூப்பர் ஸ்டார் டான்ஸ் ஆடும் இந்த பாடல் கண்டிப்பா பட்டி, தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்ல. குறிப்பா பாடலின் இறுதியில் "பிள்ளைங்களா புருஷன், பொண்டாட்டியா இல்லாமல் நண்பர்களா இருந்தீங்கன்னா வாழ்க்கை நல்லா இருக்கும்" என்று சூப்பர் ஸ்டார் சொல்லும் டைலாக் தாங்க மாஸ்...!