ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "தர்பார்" திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. ஒரு காலத்தில் ரஜினி படம் என்றாலே சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ் மட்டுமே தியேட்டர்களில் குவிந்திருப்பார்கள். ஆனால் தற்போதைய இன்டர்நெட் யுகத்தில் சாமானியர்களும், ரஜினி ரசிகர்களின் பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, படத்தை பற்றிய கமெண்ட்களை சோசியல் மீடியாவில் சுடச்சுட பதிவேற்றிவிடுகின்றனர். 

அப்படித்தான் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று வெளியான "தர்பார்" படத்தை பற்றிய நெகட்டீவ் கமெண்ட்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. பரபரப்பாக நகரும் பர்ஸ்ட் ஆப், செகன்ட் ஆப்பில் போர் அடிக்க ஆரம்பித்துவிடுவதாக ரசிகர்கள் புலம்பி தீர்த்தனர். 

சூப்பர் ஸ்டாரின் வெறி பிடித்த ரசிகர்கள் சிலரோ, ஏ.ஆர்.முருகதாஸ் என் தலைவர என்ன செஞ்சி வச்சியிருக்க என சோசியல் மீடியாவில் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் எதற்கும் அசராத சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சிலரோ, 'படம் தீயாய் இருக்கு', 'செம்ம மாஸ்', 'தலைவர் பட்டையைக் கிளப்பிருக்காரு' என கதறியுள்ளனர்.    

ஆனால் எவ்வித போட்டியும் இன்றி சோலோவாக களம் இறங்கிய "தர்பார்" திரைப்படம் சென்னையில் மட்டும் முதல் நாள் 2.27 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளிலேயே 2 கோடி வசூல் செய்திருந்தாலும், இது ரஜினியின் முந்தைய படமான '2.o' வசூலை விட குறைவு என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்தின் முதல் நாள் சென்னை வசூலைக் கூட ''தர்பார்'' படம் முறியடிக்கவில்லையாம். 'சர்கார்' படத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன, இருந்தாலும் முதல் நாள் சென்னையில் மட்டும் 2.37 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. சூப்பர் ஸ்டாரின் பிரம்மாண்ட படமான '2.O' திரைப்படமும் முதல் நாளில் 2.64 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.