ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள "தர்பார்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருப்பினும் சூப்பர் ஸ்டாரின் மாஸ் எண்டர்டெயின்மென்ட்டை காண ரசிகர்கள் குடும்பம், குடும்பமாக தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ராக் ஸ்டார் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பியுள்ளன.

'ஆதித்யா அருணாச்சலம்' என்ற மும்பை போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியுள்ளது.  முதல் பாதி, இரண்டாம் பாதி என எவ்வித பாகுபாடும் இல்லாமல் படம் சூப்பராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

70 வயது முதியவரின் நடிப்பை காண கூட்டம், கூட்டமாக மக்களை தியேட்டர்களை நோக்கி வரவழைக்கும் மேஜிக்கை ரஜினியால் மட்டுமே செய்ய முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் "தர்பார்" படம் வெளியாகி  7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் வெளிநாடுகளில் படத்தின் வசூல் தகவல் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.  ''தர்பார்'' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ள போதும், பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை ரஜினி உறுதிபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: உஷ்ஷ்... சத்தமே வரக்கூடாது... வாயில் விரல் வைத்து மிரட்டும் விஜய்... தாறுமாறு வைரலாகும் "மாஸ்டர்" செகண்ட் லுக்...!

அதன்படி, அரபு நாடுகளில் ரூ.15 கோடியும், சிங்கப்பூரில் ரூ.5 கோடியும், மலேசியாவில் ரூ.10 கோடியும் வசூல் செய்துள்ளதாம். மேலும் அமெரிக்காவில் 1.5 மில்லியன் டாலர் அளவிற்கு வசூல் செய்துள்ளதாம். இது நம் நாட்டு மதிப்பிற்கு 10 கோடிக்கு மேல் தாண்டும். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்த 7வது திரைப்படம் என்ற பெருமையும் தர்பார் படத்திற்கு கிடைத்துள்ளது.