A1 படத்தின் வெற்றியை தொடர்ந்து, சந்தானம் முதல் முறையாக காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருக்கும், டகால்டி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. 

A1 படத்தின் வெற்றியை தொடர்ந்து, சந்தானம் முதல் முறையாக காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருக்கும், டகால்டி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட வினியோகஸ்தருமான, எஸ்.பி.செளத்ரி தமது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். 

பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் துணை இயக்குனராக இருந்த, விஜய் ஆனந்த் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகா சென் நடித்துள்ளார். மேலும் பிரம்மானந்தம், ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, மனோபாலா, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சந்தானம் - யோகிபாபுவின் காம்போ... ரசிகர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் தொடர்ந்து இந்த படத்திற்கு, பாசிட்டிவ் கமெண்ட் வந்து கொண்டிருக்கும் நிலையில்... இப்படம் ஒரே நாளில், நான்கு கோடி முதல் ஐந்து கோடி, வசூல் வசூலில் கலக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இதுபற்றிய அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.