Asianet News TamilAsianet News Tamil

கம்பி எண்ணும் மீரா மிதுன் தலையில் விழுந்த பேரிடி! சைபர் க்ரைம் போலீஸ் வைத்த அடுத்த ஆப்பு...!

பட்டியல் இனத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் மக்கள் பற்றி அவதூறாக பேசி சிக்கியுள்ள நடிகை மீரா மிதுன், தற்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவரிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் துருவித்துருவி விசாரணை செய்துவரும் நிலையில், தற்போது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் இவரது யூடியூப் சேனலை முடக்க கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Cybercrime police have sent a letter to disable Meera mithun YouTube channel
Author
Chennai, First Published Aug 18, 2021, 1:33 PM IST

பட்டியல் இனத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் மக்கள் பற்றி அவதூறாக பேசி சிக்கியுள்ள நடிகை மீரா மிதுன், தற்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவரிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் துருவித்துருவி விசாரணை செய்துவரும் நிலையில், தற்போது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் இவரது யூடியூப் சேனலை முடக்க கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மீரா மிதுன் எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர். தன்னை ஒரு சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு, தேவையில்லாமல் பல விஷயங்களில் மூக்கை நுழைத்து நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.  இவருக்கு எதிரான கண்டனங்கள் எழுந்த போதிலும், அதனை சற்றும் கண்டுகொள்ளாமல் முன்னணி நடிகர்களான, விஜய், சூர்யா, போன்ற வாரிசு நடிகர்கள் தான் தன்னுடைய சினிமா வாய்ப்புகளை கெடுப்பதாகவும் அவர்களது மனைவிகள் குறித்தும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Cybercrime police have sent a letter to disable Meera mithun YouTube channel

பின்னர் தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்ட மீரா மிதுன், இதற்கெல்லாம் காரணம் திருநங்கை ஒருவர் தான் என்றும், அவர் பேச்சை கேட்டு தான் இதுபோன்று தான் நடந்து கொண்டதாகவும் கூறி அப்படியே பிளேட்டை மாற்றினார். எனினும் அவ்வப்போது முன்னணி நடிகைகளான, நயன்தாரா, த்ரிஷா போன்றோர் தன்னுடைய முகத்தை காப்பி செய்வதாக அலப்பறைகள் செய்து வருகிறார்.

Cybercrime police have sent a letter to disable Meera mithun YouTube channel

இந்நிலையில் சமீபத்தில் பட்டியலின இயக்குனர்கள் சினிமாவை விட்டே வெளியேற வேண்டும் என்பது போன்ற அவதூறு கருத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றை மீரா மிதுன் தன்னுடைய யூ டியூப் பக்கத்தில் வெளியிட, இவரது பேச்சுக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருந்து  கண்டனங்கள் குவிந்தது. பின்னர் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு கொடுத்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இது குறித்து விசாரணை செய்ய மீராமிதுன் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் போலீசில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

Cybercrime police have sent a letter to disable Meera mithun YouTube channel

மீண்டும் தன்னுடைய திமிர் பேச்சை அவிழ்த்து விட்டு என்னை யாரும் கைது செய்ய முடியாது போலீசாருகே சவால் விட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி இவருக்கு எதிரான கண்டனங்கள் அதிகமான நிலையில், தலைமறைவாக இருந்த மீரா மிதுனை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து தமிழக போலீசார் கைது செய்து, சென்னை கொண்டு வந்தனர்.  இவருக்கு வீடியோ எடுத்து உதவி செய்த இவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷாம் என்பவரையும் கைது செய்த போலீசார்,  மீரா மிதுனிடம் சுமார் மூன்று மணிநேரம் விசாரணை செய்த பின்பு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தினர்.

Cybercrime police have sent a letter to disable Meera mithun YouTube channel

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீராவை வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீராமிதுனிடம் தொடர்ந்து  விசாரணை செய்துவரும் போலீசார், இவர அடிக்கடி மாற்றி மாற்றி பேசுவதாகவும், எனவே மனநல மருத்துவர் கொண்டு விசாரணையை துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் மீரா மிதுனுக்கு போதை மருந்து உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்து வந்த தோழி ஒருவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என சில தகவல்கள் வெளியானது. இதையடுத்து தற்போது நடிகை மீரா மிதுன் அவ்வபோது பலரை விமர்சனம் செய்யும்படி மீத மிதுன் அவரது யூ டியூப் சேனலில் வெளியிட்டுள்ளதால், அவரது யூ டியூப் சேனலைக்கு முடக்க வேண்டும் என்று, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios