cricketer ashwin question for kamalahassan

இல்லத்தில் இருந்து ஆரம்பித்தார். பின் அப்துல்காலமின் சகோதரர் மற்றும் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்குவது குறித்து கமல் கூறியபோது, 'பிரமிப்பூட்டும் எளிமையை, கலாமின் இல்லத்திலும் இல்லாதாரிடமும் கண்டேன். கலாமின் பயணம் எங்கு துவங்கியதோ அதே இடத்தில் நானும் என் பயணத்தை தொடங்குவதை நினைத்து பெருமையடைவதாக கூறினார்.

இந்த நிலையில் இந்திய கிரிகெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின், கமலஹாசனின் அரசியல் பயணம் துவங்கியுள்ளது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், 'இன்று மாலை புதிய அரசியல் கட்சியை தொடங்கும் கமலின் பயணம் தமிழகத்தில் மிகபெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரை போலவே தமிழகத்தின் உள்ள பலரது எதிர்பார்ப்பும் இதுவாகவே உள்ளது. என்ன நடிக்கும் அசியலில் மாற்றம் வருமா..? வராதா..? பொறுத்திருந்து பாப்போம்.