மனம் திறக்கும் பிரபலங்கள்..! கிரேஸி மோகன் இப்படிப்பட்டவரா..?!  

பிரபல காமெடி நடிகர், கதை எழுத்து என அனைத்திலும் சிறந்து விளங்கிய  நடிகர் கிரேசி மோகன், இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த தகவல் இவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை கிட்டத்தட்ட, 30 நாடகங்கள், 50 திற்கும் மேற்பட்ட படங்கள், மற்றும் 100 சிறுகதைகள் எழுதியுள்ள இவர், கலை துறை மீது உள்ள ஆர்வத்தால் இன்ஜினியரிங் படித்துவிட்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். பின்னர் படிப்படியாக உயர்ந்து சினிமாத்துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியவர். இந்த நிலையில் இவரின் திடீர் மறைவு அதிர்ச்சியில் ஆழ்த்திய உள்ளது. தற்போது இவரது மறைவிற்கு பலரும், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் முகம் சுளிக்காத வகையில் வசனங்களை எழுதியவர். மிகப்பெரிய வசனகர்த்தாவாக இருந்தாலும் எளிமையின் அடையாளமாக திகழ்ந்தவர் என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்து உள்ளார் 

கிரேஸிமோகன் வந்தால் படப்பிடிப்பு தளமே கலகலப்பாக மாறிவிடும், கிரேஸி மோகன் நல்ல மனிதர் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என நடிகர் செந்தில் தெரிவித்து உள்ளார் 

அவரது வசனத்தில் நான் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமானவை என டெல்லி கணேஷ் தெரிவித்து உள்ளார் 

தனது வசனங்களால் நகைச்சுவை படங்களை இயக்கியவர் என நடிகர் மனோபாலா தெரிவித்து உள்ளார்

கூட்டுக்குடும்பத்தில் மீதான  நம்பிக்கைக்கில் அவர் கடைசி வரை கூட்டுக குடும்பத்திலே வாழ்ந்தவர் என  நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்து உள்ளார்