பிரபல காமெடி நடிகர், எழுத்தாளர், கதாசிரியர், என அனைவராலும் அறியப்பட்ட நடிகர் கிரேஸி மோகன், இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.  இந்த தகவல் இவருடைய ரசிகர்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை கிட்டத்தட்ட, 30 நாடகங்கள், 50 திற்கும் மேற்பட்ட படங்கள், மற்றும் 100 சிறுகதைகள் எழுதியுள்ள இவர்,  கலை துறை மீது உள்ள ஆர்வத்தால் இன்ஜினியரிங் படித்துவிட்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்.

சென்னை கிண்டியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் படித்த இவர்,  தன் நண்பருடன் சேர்ந்து விளையாட்டாக   கிரேட் பேங்க் ராபெரி என்கிற கதையை இவரே எழுதி நடித்தார்.  இதற்காக சிறந்த நடிகருக்கான பரிசு மற்றும் சிறந்த கதைக்கான பரிசு இவருக்கு கிடைத்தது.  

இதைத்தொடர்ந்து, இவருடைய தம்பியும் அண்ணன் வழியைப் பின்பற்றி நாடக கலைஞராக மாறினார். இப்படி திரையுலகில் எந்த ஒரு பின்புலமும் இன்றி, மெல்ல மெல்ல தன்னுடைய சகோதரனுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர்  மோககிரேஸின். மேலும் தமிழ் நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்துள்ளது.