கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிக பெரிய பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், இந்தியா முழுவதும் 144 சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

மக்களும், பிரபலங்களும் அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, பின்பற்றி வருகிறார்கள். அதிலும் நேற்று முதல் இந்த சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதால், அணைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

சீன மக்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வரும் நிலையில், அமெரிக்கா போன்ற இடங்களும்... கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் மீண்டும் குணமடைந்து வருகின்றனர். 

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஆரோன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவரை தனிமை படுத்தி உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இவர்... கொரோனா தாக்கியதற்கு பின், தான் சுவைக்கும் மற்றும் முகரும் திறனை இழந்து விட்டதாக இவர் தெரிவித்துள்ளதாக கூறப்புடுகிறது.

கொரோனா வைரஸில் தாக்கத்தில் இருந்து, மெல்ல மெல்ல சிலர் மீண்டும் உயிர் பிழைத்த வரும் நிலையில், இவர் இப்படி ஒரு தகவலை கூறியுள்ளார். மேலும் கொரோனா யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் அனைவரும் கவனமாக இருக்கும் படியும் அவர் கூறியுள்ளார்.