சற்று ஓய்ந்திருந்த கொரோனா மீண்டும், தன்னுடைய இரண்டாவது அலையை, துவங்கி மக்களையும், பிரபலங்களையும், அரசியல் தலைவர்களையும் வாட்டி வதக்கி வரும் நிலையில், ஏப்ரல் 7 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ் சினிமாவில் சுமார் 72 படங்களை, ரஜினி, கமல், சிவாஜி, ஜெய்சங்கர் ஆகியோரை வைத்து இயக்கி கமெர்சியல் ஹிட் கொடுத்தவர் எஸ்.பி.முத்துராமன். இளைய தலைமுறைகளுக்கு வழிவிடும் நோக்கத்தில், தற்போது திரைப்படங்கள் இயக்குவதில் இருந்து விலகினாலும், தமிழ் சினிமாவில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் எழுந்து நின்று குரல் கொடுப்பவர்களில் இவரும் ஒருவராக இருப்பார்.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்க பழம்பெரும் இயக்குநர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவரது உடல் நிலை குறித்து, அறிக்கை வெளியிட்டு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டதாக தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இயக்குனர் எஸ்பி முத்துராமன் அவர்கள் தங்களது மருத்துவமனையில் கோவிட் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருடைய உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் முற்றிலும் குணமாகி விட்டதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தற்போது சீராக இருக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை, எஸ்.பி.முத்துராமனுக்கு தெரிவித்து வருகிறார்கள்.