Asianet News TamilAsianet News Tamil

'சார்பட்டா' படத்திற்கு பின் வரிசை கட்டும் வாய்ப்புகள்... சூர்யாவின் பாராட்டு! குதூகலத்தில் தங்கதுரை!

‘ஏ ஓன்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜாக்பாட்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்த விஜய் டிவி பிரபலம் டைகர் தங்கதுரைக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம்.
 

cook with comali thangathurai sharing the experience
Author
Chennai, First Published Aug 26, 2021, 8:03 PM IST

‘ஏ ஓன்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜாக்பாட்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்த விஜய் டிவி பிரபலம் டைகர் தங்கதுரைக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம்.

'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே பல படங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படம் என்னை உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. நடுஜாமத்துல ஒரு ரசிகர், ‘நான் நார்வேயிலிருந்து கதைக்கிறேன்’ என்று பாராட்டுகிறார். காரைக்குடியில் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்புக்கு போனால் ‘செமையா பண்ணியிருந்தீங்க தங்கம்’னு சூர்யா சார் பாராட்டுகிறார். இந்த பெருமை எல்லாம் பா.ரஞ்சித்தையே சேரும்.

cook with comali thangathurai sharing the experience

பா.ரஞ்சித் சார் ரொம்ப பொறுமைசாலி. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் நடிகர், நடிகைகளிடம் டென்ஷன் இல்லாமல் கூலாக வேலை வாங்குவார். ‘கபாலி’ டைம்ல பா.ரஞ்சித்தை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். அதன் பிறகு நான், வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். ‘சார்பட்டா’வில் ஞாபகம் வைத்து வாய்ப்பு கொடுத்தார். படத்துல என்னுடைய லுக், ஸ்டைல் பேசப்படுகிறது என்றால் அதுக்கு ரஞ்சித் சார்தான் காரணம். முக்கியத்துவம் உள்ள வர்ணனையாளர் கேரக்டரை என்னை நம்பி கொடுத்தார். ‘டேக்’ சிறப்பாக பண்ணும்போது யூனிட்ல உள்ளவங்களை கைதட்டச் சொல்லி உற்சாகப்படுத்துவார். சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டேயிருப்பேன். ‘ஷாட் எப்போதோ முடிந்துவிட்டது. போய் ரெஸ்ட் எடுத்துக்கோ’னு சிரிக்க வைப்பார்.

டயலாக் பேசும்போது ‘வேற லெவலில் அடிச்சிட்டார், மாஸ்’னு இப்போது உள்ள வார்த்தைகளை பேசினால் ‘இது ப்ரீயட் படம்... அடி இடி மாதிரி, என்ன ஒரு வேகம்’ என்று தமிழ் பிரபா கரெக்ட் பண்ணுவார். ஆர்யா, பசுபதி ஜி.எம்.சுந்தர், கலையரசன், காளிவெங்கட், ஜான்விஜய் உட்பட மொத்த டீமும் ஜாலியாக பழகினார்கள். படம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதற்கு எல்லாரும் கொடுத்த உழைப்புதான் காரணம். அக்டோபர், நவம்பர் மாத குளிரையும் பொருட்படுத்தாம வெற்று உடம்பில் நடிச்சாங்க. பின்னணி வேலைகள் நடக்கும்போதே சந்தோஷ் நாரயணன் பாராட்டினார். அதுதான் ‘சார்பட்டா’வுக்கு எனக்கு கிடைத்த முதல் பாராட்டு. 

cook with comali thangathurai sharing the experience

விரைவில் வெளிவரவுள்ள யோகிபாபுவின் ‘பன்னிகுட்டி’, சி.வி.குமார் தயாரிப்பில் மனோ கார்த்திக் இயக்கும் ‘ஜாங்கோ’, ரியோவின் ‘ப்ளான் பண்ணி பண்ணனும்’, மதிமாறன் இயக்கும் ‘செல்ஃபி, ஆதியின் ‘பார்ட்னர்’, சிம்பு, ஹன்சிகாவின் ‘மஹா’ போன்ற படங்களில் வெரைட்டியான தங்கதுரையை பார்க்கலாம். காமெடி நடிகராக அறிமுகமானாலும் இயக்குநர்கள் என்னை  எந்த கேரக்டர் கொடுத்தாலும் பண்ணக்கூடிய பெர்பாமராக பார்க்கிறார்கள். காமெடி தாண்டி நிறைய வெரைட்டியான கேரக்டர்ஸ் பண்றேன்.

cook with comali thangathurai sharing the experience

இப்போது, ‘சார்பட்டா’ வெற்றிக்கான பலனாக பல படங்கள் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா- பாண்டிராஜ் இணைந்திருக்கும்‘ எதற்கும் துணிந்தவன்’, கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம், சிபிராஜ் நடிக்கும் படம், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், சன்னிலியோன் நடிக்கும் படம் உட்பட ஏராளமான படங்கள் கைவசம் இருக்கிறது.  சில ஹீரோ வாய்ப்பும் வந்தது. காமெடிதான் என்னுடைய களம். அதனால் காமெடியில்தான் என்னுடைய கவனம் இருக்கும். காமெடி நடிகராக இருந்தால் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கலாம். காமெடிக்கு எப்போதும் ரசிகர்கள் இருப்பார்கள். வில்லனுக்கு கைத்தட்டல் கிடைக்காது. ஆனால் காமெடியனுக்கு க்ளாப், மீம்ஸ் பின்னியெடுக்கும். காமெடி மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்கள் சொல்ல முடியும். முக்கியமா, காமெடி நடிகர்களுக்கு ஃபைட் இருக்காது. அதிலிருந்தும் தப்பிக்கலாம்.

cook with comali thangathurai sharing the experience

எனக்கான ஸ்டைல் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். பாடிலேங்வேஜ் கலந்த டயலாக் டெலிவரி, எதுகை, மோனையாக பேசுவதை என்னுடைய ஸ்டைலாக பார்க்கிறேன். லாக்டவுன் டைம்ல குடும்பத்துடன்  அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. கொரோனா, வாழ்க்கை நிரந்தரம் கிடையாது என்று புரிய வைத்துள்ளது. இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. நிறைய சார்லி சாப்ளின் படங்கள் பார்த்தேன்’’ என்றவர், ‘‘மக்களின் ஆதரவும் கலை உலகத்தினரின் அன்பும்தான் என்னை நாடறிந்த நடிகனாக மாற்றியுள்ளது’’ என்று அவருக்கே உரிய ஸ்டைலில் புன்னகைக்கிறார் தங்கதுரை.

Follow Us:
Download App:
  • android
  • ios