Asianet News TamilAsianet News Tamil

'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து..! அமர்க்களமான பாடலுடன் வெளியான ப்ரோமோ வீடியோ!

'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது குறித்து... அதிகார பூர்வ தகவல் தற்போது புரோமோ விடியோவுடன் வெளியாகி உள்ளது.
 

cook with comali season 4 promo video released
Author
First Published Jan 6, 2023, 8:35 PM IST

விஜய் டிவியில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதிக ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு, சிரிக்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த ஆண்டு 'குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், விரைவில் சீசன் 4 நிகழ்ச்சி துவங்க உள்ளதாக ப்ரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளது விஜய் டிவி.

cook with comali season 4 promo video released

இந்த நிகழ்ச்சியில் குக் மற்றும் கோமாளியாக கலந்து கொள்ளும் அனைவருமே மிகவும் பிரபலமாகி, அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்பு மற்றும் சின்னத்திரை வாய்ப்புகளை கைப்பற்றி வருவதால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர், நடிகைகள் என பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக இந்த நிகழ்ச்சியை கோமாளியாக இருந்த, புகழ், ஷிவாங்கி, பாலா, உள்ளிட்ட பலர், தற்போது வெள்ளித்திரையில் காமெடி நடிகர்களாக மாறியுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும், மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

cook with comali season 4 promo video released

குக் வித் கோமாளி முதல் சீசனில் வனிதா டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் வெற்றி பெற்றனர். இதை தொடர்ந்து  சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம்போல் நடுவர்களாக சமையல் கலைஞர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கோமாளிகளாக சுனிதா, மணிமேகலை, ஜிபி முத்து, உள்ளிட்ட சிலர் பங்கேற்க உள்ளதை புரோமோ மூலம் உறுதி செய்துள்ளது விஜய் டிவி.

cook with comali season 4 promo video released

எனினும் இந்த முறை 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் குக்குகளாக யார் யார் பங்கேற்பார்கள், கடந்த 3 சீசன்களிலும் கோமாளியாக பங்கேற்ற பலர், தற்போது வெள்ளித்திரை படங்களில் பிசியாகி உள்ளதால்... குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில்... புது கோமாளிகள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள புரோமோ பாடலே, அனைவரையும் கவரும் விதமாக அமைந்துள்ளது. விரைவில் நிகழ்ச்சி துவங்கும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios