Asianet News TamilAsianet News Tamil

'குக் வித் கோமாளி' பைனலில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்!

விஜய் டிவியில், ரசிகர்களின் மாபெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 பைனலில் பிரபல நடிகர் கலந்துகொண்டு டைட்டில் வின்னருக்கு, பரிசு வழங்கி உள்ளார் என்பது தற்போது கசிந்துள்ள புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
 

cook with comali final actor simbu participate
Author
Chennai, First Published Apr 6, 2021, 9:13 PM IST

விஜய் டிவியில், ரசிகர்களின் மாபெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 பைனலில் பிரபல நடிகர் கலந்துகொண்டு டைட்டில் வின்னருக்கு, பரிசு வழங்கி உள்ளார் என்பது தற்போது கசிந்துள்ள புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு மட்டுமல்லாமல் கோமாளிகளுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.  மேலும் இதில் கலந்து கொண்டதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருவதாகவும் குக்குகள் தங்களுடைய மகிழ்ச்சியை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

cook with comali final actor simbu participate

இந்நிலையில்  இந்த வாரத்துடன் 'குக் வித் கோமாளி ' சீசன் 2 நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. பைனலுக்கு கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் தேர்வாகியுள்ள நிலையில் அவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

cook with comali final actor simbu participate

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை மேலும் ஸ்பெஷலாக்கும் விதமாக, யார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. 'குக் வித் கோமாளி ' நிகழ்ச்சியின் நடுவர் தாமுவுடன்  நடிகர் சிம்பு நிற்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளதால், இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவருக்கு கோப்பை வழங்க உள்ளது சிம்பு என்பது தெரிகிறது.

cook with comali final actor simbu participate

மேலும் கனி டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்ய பட்டுள்ளார் என்பது போன்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில்,  இரண்டாவது இடத்தை அஸ்வின் அல்லது ஷகிலா ஆகிய இருவரில் ஒருவர் பெருமை பெற உள்ளதாகவும், மூன்றாவது இடத்தை பாபா பாஸ்கர் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பைனல் நிகழ்ச்சி  சுமார் 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios