மேலும் பவித்ரா மற்றும் சுதர்சன் ஆகியோர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த இரண்டு தினங்களாக வைரலானதை தொடர்ந்து இந்த விளம்பரத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. .

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் தற்போது, இறுதி சுற்றில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் ஒருவரான, பிரபல மாடலும், நடிகையுமான பவித்ரா லட்சுமி. ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறிய நிலையில், வயல் கார்டு சுற்று மூலம் மீண்டும் பைனலிஸ்ட்டாக தேர்வு செய்ய பட்டுள்ளார். இந்நிலையில் இவர் திருமண கோலத்தில் நடித்த விளம்பரப்படத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பவித்ரா வயல் கார்டு சுற்றில் கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு தேர்வான பின்னர், கடந்த வாரம் நடந்த செலிபிரிட்டி நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள் அனைவரும், அவர்களது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரோடு கலந்து கொண்டு மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அந்த வகையில், பவித்ரா இளைஞர் ஒருவருடன் வந்திருந்தார். அவரும் ஒரு மாடல் தான். இருவரும் இணைந்து சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளனர் இதன் மூலம் கொண்ட நட்பின் காரணமாகவே அவர்தான் செலிபிரிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

பவித்ரா இவருடன் கலந்து கொண்டது, புகழை விட புகழின் ரசிகர்களை தான் மிகவும் அதிர்ச்சியாகியது. மேலும் பவித்ரா மற்றும் சுதர்சன் ஆகியோர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த இரண்டு தினங்களாக வைரலானதை தொடர்ந்து இந்த விளம்பரத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

அந்த வீடியோவில்.. பட்டு சேலையில், மணக்கோலத்தில் இருக்கும் பவித்ரா மற்றும் சுதர்ஷன் கோவிந்த் உட்கார்ந்து இருப்பது போதும் அதன் பின் திருமணம் முடிந்தபின் மணமேடையை இருவரும் சுற்றி வருவது போலவும் இருதரப்பு பெற்றோர்களும் ஆசீர்வதிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.