களேபரமான பிக்பாஸ் வீடு..! சூடு பிடிக்கும் "தமிழ் பொண்ணு" விவகாரம்..ஜாங்கிரி மதுமிதா குமுறல்..! 

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் கடந்து விட்டது. சென்ற வார இறுதியில் இந்த நிகழ்ச்சியில் நடந்த பல முக்கிய காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்  தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அகம் டிவி வழியாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் நேரடியாக கமல் பேசினார். அப்போது நிகழ்ச்சிக்கு இடையே பல்வேறு சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக நடிகை அபிராமி தொடக்க நாள் முதலே ஏதாவது ஒரு விஷயத்தில் தினமும் அடம்பிடிப்பார் அல்லது சக போட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.

அந்த வகையில் சக போட்டியாளரான மகனுடன் விளையாட்டாக பேசி வரும் அபிராமி, ஒரு வாட்டர் பாட்டிலை வைத்து அது உனக்கும் எனக்கும் பிறந்த குழந்தை என கிண்டலாக நக்கலடித்து வந்தார். 


அந்த வாட்டர் பாட்டிலை கையில் வைத்து கொஞ்சுவதும் அபிராமியின் கிண்டல் செய்கையாக இருந்தது. அபிராமிக்கு அடுத்த படுக்கை கொண்ட மதுமிதா, அபிராமியின் இந்த போக்கிற்கு சற்று எதிர்ப்பு எழுப்பியவாறு பேசுவார். இந்த நிலையில் நேற்றைய தினத்தில் செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபுவுக்கு கமல் ஒரு ராக்கெட் கொடுக்கிறார்.அதில், கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் வீட்டில் நடந்த முக்கிய சில விஷயங்களை செய்தியாக விவரிக்க சொல்கிறார். உடனே தயாரான பாத்திமாபாபு செய்திகளை வாசிக்க தொடங்குகிறார். அதில் அபிராமி முகன் குறித்த வாட்டர் பாட்டில் விஷயத்தையும் கூறுகிறார்.


இதற்கு உடனடியாக மதுமிதா ஏன் இதையெல்லாம் சொல்கிறார்.... இப்படி சொல்லிட்டீங்களே? என கொஞ்சம் ஷாக்காகி பாத்திமாபாபுவிடம் மெதுவாக கேட்கிறார். உடனே டென்ஷனான அபிராமி அவளை வாயை மூட சொல்லு என சாக்ஷியுடன் முணங்குகிறார். இதற்கிடையில் மதுமிதா "நான் தமிழ் பொண்ணு"... எங்க வீட்டில்  இந்த நிகழ்ச்சியை பார்க்கிறாங்க... எல்லோருமே பார்த்துகிட்டு தான் இருக்காங்க.." என கூறுகிறார்.

இந்த வார்த்தை சக போட்டியாளர்களான சாக்ஷி, அபிராமி, குறிப்பாக ஷெரின் என அனைவருக்கும் எரிச்சலை கிளப்பி உள்ளது. தமி பொண்ணு என  மதுமிதா சொன்ன உடனே ஷெரின் கோபப்படுகிறார். எதற்காக நீ அப்படி சொன்னாய்? தமிழ் பொண்ணு என்றால் எங்களுக்கு கலாச்சாரம் கிடையாதா..? உங்களுக்கு மட்டும்தான் உண்டா? எதைவைத்து நீ தமிழ் பொண்ணு என பிரித்து பார்க்கிறாய்..? உன்னை நடிக்கச் சொன்னால் நடிக்காமல் இருக்கிறாயா அப்போது எங்கு சென்றது தமிழ் பொண்ணு கலாச்சாரம் எல்லாம்..? என தொடர்ந்து கேள்வி கேட்க தொடங்குகின்றனர்.

இவர்களின் இந்த நிகழ்வு குழாயடி சண்டையாக மாறி மாறி பேசிக் கொள்வதை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த விஷயம் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.