பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் தான் தற்போது முன்னணி, இயக்குனர்களுக்கு இணையாக படம் இயக்கி, வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அட்லீ.

இவர் எடுத்த முதல் படத்திலேயே ஹீரோயின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான்,  சிறு இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நயன்தாரா ரீஎன்ட்ரி கொடுத்ததால் இந்த படம் மீது ரசிகர்களுக்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. 

அதற்க்கு ஏற்ற போல் இந்த படமும் செம்ம ஹிட்... ஆனால், இந்த படம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான 'மௌன ராகம்' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டு, தற்போதைய ரசிகர்களுக்கு ஏற்ற போல் அழகாக பட்டி, டிங்கரிங் பார்த்திருந்தார் அட்லீ என விமர்சிக்கப்பட்டது. ஆனால் முதல் படம் ஹிட் என்பதால், அதனை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.

முதல் படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்த, அட்லீ இரண்டாவது படத்திலேயே, கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், விஜயை வைத்து 'தெறி' என்கிற படத்தை இயக்கினார். 

இந்த படத்தையாவது சொந்தமாக கதை எழுதி இயக்கி இருப்பர் அட்லீ என்று எதிர்பார்த்தவர்களுக்கு காத்திருந்தது, அதிர்ச்சி தான். கேப்டன் விஜயகாந்த் நடித்து வெளியான 'சத்திரியன்' படத்தின் கதையை காப்பி அடித்தது தான் இந்த படத்தை இயக்கினார் என்றும், அட்லீயை திருட்டு கதை இயக்குனர் என்றும் பலர் தொடர்ந்து விமர்சித்தனர்.

ஆனால் இந்த படமும் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், விமர்சனங்களுக்கு இடையிலும் எப்படியோ தப்பித்து, வெற்றி பட இயக்குனர் என்று தன்னுடைய பெயரை நிலைநாட்டி விட்டார் அட்லீ.

இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்யை வைத்து, 'மெர்சல்' படத்தை இயக்கினார். ஏற்கனவே இவர் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால்... இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டது.

மேலும் இந்த படத்தில் மொத்தம் மூன்று கெட்டப்பில் விஜய் நடிக்கிறார்  என கூறப்பட்டதால், இந்த படம் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மூன்று முகம் படத்தின் தழுவலாக இருக்குமோ என படம் வெளியாவதற்கு முன்பே கிசுகிசுக்கப்பட்டது. 

படம் வெளியான பிறகு இப்படி யூகிக்க பட்டது உண்மையானது. 'மெர்சல்' மூன்று முகம் படத்தை தழுவி எடுக்கப்பட்ட கதையாகவும், அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை போலவும் இருந்தது.

இதனால், தொடர்ந்து ஒரு முறை அல்ல மூன்று முறை அட்லீ மற்ற இயக்குனர்கள் கதையை காப்பி அடித்து படம் இயக்கியது தற்போது புதிய பிரச்சனையாக உருவாகியுள்ளது.  

மெர்சல் படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகும் நிலையில் அந்த படத்தை ரஜினியின் மூன்று முகம் படத்தை காப்பி அடித்து இயக்குனர் அட்லி, எடுத்ததாக எழுந்த பஞ்சாயத்து தற்போது வரை முடியவில்லை. இழப்பீடாக 4 கோடி ரூபாய் கேட்டு எழுந்துள்ள பஞ்சாயத்து அட்லீக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்த திரைப்படம், அபூர்வ சகோதர்கள் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இயக்குனர் அட்லியிடம், கமல்ஹாசன் அதற்காக இழப்பீடு எதுவும் கோரவில்லை.

இந்த நிலையில் மெர்சல் படத்தின் மூலக்கதையை ரஜினியின் மூன்று முகம் படத்தில் இருந்து உருவியதாக கூறி அந்த படத்தின் ரீமேக் உரிமையை வைத்திருக்கும் பைவ்ஸ்டார் கதிரேசன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடமாக நடந்து வந்த பஞ்சாயத்து வெள்ளிக்கிழமை முற்றியது. மூன்று முகம் படத்தை தயாரித்த சத்யாமூவிஸ் ஆர்.எம் வீரப்பனிடம் இருந்து ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கும் பைவ்ஸ்டார் கதிரேசன், அவரது மனைவி, அம்மா கிரியேசன்ஸ் சிவா, ஆர்.கே.செல்வமணி, கே.பாலு , இயக்குனர் அட்லி உள்ளிட்டோர் இருந்தனர்.

அதில் மெர்சல் படத்திற்கு அட்லி சம்பளமாக பெற்ற 12 கோடி ரூபாயில் 30 சதவீதத்தை அதாவது 4 கோடி ரூபாயை மூன்று முகம் படத்தின் உரிமையை வைத்துள்ள பைவஸ்டார் கதிரேசனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

விடிய, விடிய நடந்த பஞ்சாயத்தில் இழப்பீடு வழங்க ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அட்லியை வைத்து இனி யாரும் படம் தயாரிக்க கூடாது என்று தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதிர்ச்சி அடைந்த இயக்குனர் அட்லி நூறு சதவீதம் மெர்சல் தனது சிந்தனையில் உருவான கதை என்று உறுதியாக இருந்துள்ளார்.

இதையடுத்து 5 இயக்குனர்கள் , 5 கதாசிரியர்களை வைத்து மெர்சல் மற்றும் மூன்று முகம் படங்களை பார்த்து அதில் எந்த காட்சிகள் எல்லாம் காப்பி அடிக்கபட்டவை என்று அவர்கள் தரும் அறிக்கையின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அதற்கு கதை திருட்டு என்ற சந்தேகம் இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள், எதிர் கொள்கிறேன் என்று இயக்குனர் அட்லி கூறி சென்றதாவும் கூறப்படுகின்றது.

சுய சிந்தனை இல்லாமல் ஏற்கனவே வந்த படங்களை காப்பி அடித்து படம் எடுத்தால் எந்தமாதிரியான சிக்கல் வரும் என்பதற்கு அட்லிக்கு நடந்த பஞ்சாயத்து காட்சிகளே சாட்சி என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது வருகிறது.