Concert to celebrate AR Rahmans music tour from roja to katru veLiyidai
ஏ.ஆர்.ரகுமான் தனது 25 வருட இசைப் பயணத்தையொட்டி இலண்டனில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார்.
“நேற்று இன்று நாளை” என்கிற இந்த இசை சுற்றுப் பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ஆம் தேதி இலண்டனில் நடைப்பெறுகிறது.
இதுகுறித்து ஏ,ஆர்.ரகுமான் வெளியிட்ட அறிக்கை:
‘‘கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப் பயணம் உண்மையிலேயே மறக்க முடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப் பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான்.
என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது.
‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப் பயணத்தைக் கொண்டாடும் இலண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சியில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
