நடிகர், இயக்குனர், தொகுப்பாளர், எழுத்தாளர் என திரையுலகில் பன்முகம் கொண்டவர்களில் ஒருவர் நடிகர் விசு.  தற்போது வயது மூப்பு காரணமாக இவர் திரையுலகை விட்டு விலகி இருந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், இவரின் தனி தன்மையான நடிப்பு , நல்ல கருத்துள்ள படங்கள், மற்றும் அந்த படத்தில் வரும் வசனங்கள் கூட மனதில் பதியும்படி அமையும்.   

இந்நிலையில் இவர் மீது நடிகர் பாக்யராஜ், ரமேஷ் கண்ணா உள்ளிட்டவர்கள் தலைமையிலான திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

இந்த புகார் மனுவில் இவர்கள் கூறியுள்ளது... "இதற்கு முன்பு பதவியிலிருந்த விசு மற்றும் அவரை சார்ந்தவர்கள் தற்போது சங்கத்தின் கணக்கு வழக்கு விவரங்களை தங்களிடம் ஒப்படைக்காமலும், சங்க பணத்தை அறக்கட்டளைக்கு மாற்றியதோடு தங்களை வரவு செலவு செய்ய முடியாத படி செய்துள்ளனர் என கூறியுள்ளார்கள்" மேலும் இந்த வழக்கு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.