Asianet News TamilAsianet News Tamil

அடுத்தடுத்து ஆப்பு... “இரண்டாம் குத்து” இயக்குநரை கைது செய்யக்கோரி காவல் ஆணையரிடம் குவியும் புகார்கள்...!

இந்நிலையில் இன்று இரண்டாம் குத்து பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது

Complaint against Irandam kuthu director and producer in chennai commissioner office
Author
Chennai, First Published Oct 12, 2020, 5:22 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆபாசமா? என காண்போர் வெட்கி கூசும் வகையில் “இரண்டாம் குத்து” என்ற அடல்ட் படம் தயாராகியுள்ளது. வக்கிரத்தின் உச்சமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. இரட்டை அர்த்த வசனங்கள், படுக்கை அறை காட்சிகள், முத்தக்காட்சிகள் என கிட்டதட்ட பிட்டு படங்களை மிஞ்சும் அளவிற்கு வெளியாகியுள்ள டீசரைக் கண்டு தமிழ் திரையுலகினர் கொதித்து போயுள்ளனர். இந்த மாதிரியான கேவலமான படங்கள் குழந்தைகளின் மனதில் விஷத்தை கலக்கும் என்பதால்  “இரண்டாம் குத்து” படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

Complaint against Irandam kuthu director and producer in chennai commissioner office

சோசியல் மீடியாவில் இந்த படத்தின் டீசரைப் பார்த்து கழுவி ஊத்ததவர்களே இல்லை எனும் அளவிற்கு தாறுமாக கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத படக்குழு இரண்டாம் குத்து எனும் ஆபாச படத்தின் போஸ்டரை ஊரெல்லாம் ஒட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கொடுக்கும் பட்சத்தில் தமிழகத்திலும் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும். 

Complaint against Irandam kuthu director and producer in chennai commissioner office

 

இதையும் படிங்க: சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

அப்படி தியேட்டர் திறக்கும் முதல் நாளே இந்த படத்தை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டீசரில் மிகவும் ஆபாசமான காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் குத்து என்ற பெயரில் வெளியாக உள்ள ஆபாச படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மற்றும் அந்த படத்தில் நடித்துள்ள பிற நடிகர்களை கைது செய்ய வேண்டும் என பனங்காட்டு படை கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Complaint against Irandam kuthu director and producer in chennai commissioner office

 

இதையும் படிங்க: ஜிகு ஜிகு உடையில் தொடையைக் காட்டி... இளசுகளை ஏங்க வைத்த ராஷி கண்ணா... கவர்ச்சியில் உச்சம் தொட்ட போஸ்கள்...!

இந்நிலையில் இன்று இரண்டாம் குத்து பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் உணர்வை தூண்டும் விதமாக 'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசர் இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும் 'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீசரை தடை செய்ய வேண்டும் என்று கோபிநாத் என்பவர் காவல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆரம்பத்தில் இதையெல்லாம் ப்ரீ பப்ளிசிட்டி என மார்தட்டிக் கொண்ட படக்குழுவினர், தற்போது மக்களின் கொந்தளிப்பை பார்த்து கதிகலங்கி போயுள்ளனராம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios