‘யோகிபாபுவோட சம்பளம் என்னன்னு தெரிஞ்சா ஹார்ட் அட்டாக் வரும் பரவாயில்லையா பாஸ்?
`தர்மபிரபு' என்கிற அப்படத்தில் எமன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் மற்றொரு முக்கிய பணியையும் யோகி பாபு மேற்கொள்கிறார். அதாவது முதன்முறையாக படத்தின் வசனங்களை யோகி பாபு எழுதுகிறார்.
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தற்போது உச்சத்தில் இருப்பவர் நடிகர் யோகிபாபுதான் என்றும் அவர் தற்போது படத்துக்கு ஒருகோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாகவும் நொம்பலமான தகவல்கள் நடமாடுகின்றன.
அஜீத்,விஜய் உட்பட அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் யோகிபாபு தொடர்ந்து கமிட் ஆகிவருகிறார். விஜயின் ‘சர்கார்’ அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படங்களுக்கு முன்புவரை நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிவந்த யோகிபாபு தற்போது சோலோ ஹீரோவாகவும் நடிக்கத்துவங்கியுள்ளார். `தர்மபிரபு' என்கிற அப்படத்தில் எமன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் மற்றொரு முக்கிய பணியையும் யோகி பாபு மேற்கொள்கிறார். அதாவது முதன்முறையாக படத்தின் வசனங்களை யோகி பாபு எழுதுகிறார்.
விமல், வரலட்சுமி இணைந்து நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் `வத்திக்குச்சி' திலீபன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ரமேஷ் திலக் சித்ரகுப்தன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.இந்த படம் தவிர்த்து `கூர்கா', `ஜாம்பி' உள்ளிட்ட படங்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். சிம்பு நடிக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்', ஜீவாவின் `கொரில்லா' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்திலும் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ள யோகிபாபு, நாள் ஒன்றுக்கு 6 லட்சம் முதல் எட்டு லட்சம் வரை கேட்பதாகவும், ஹீரோவாக நடிக்க ஒரு கோடிவரை கேட்பதாகவும் தெரிகிறது.