தமிழ் சினிமாவில் நடிகர்களாக நிலைத்து நிற்பதும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வாரிசு நடிகர்களாக இருந்தால் கூட அவர்களுடைய நடிப்பு, மற்றும் கதை தேர்வு மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர்களாக நிலைக்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

இதே நிலை தான் காமெடி நடிகர்களுக்கும், வித்தியாசமான காமெடி மூலம் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே திரையுலகில் ஜெயிக்க முடியும். அந்த வகையில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். இவர் விஜய், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் எப்போதும் ட்விட்டரில் தன்னுடைய மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக கூறி சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 

தற்போது நடிகர் சதீஷிற்கு திடீர் என திருமணம் நடைபெற்றது போல் சில புகைப்படங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை இயக்குனர் முத்தையா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் தீயாக பரவ பலர் சதீஷிடம் உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா? என்றும் திருமண வாழ்த்தும் என்றும் கூறி வந்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ் ட்விட்டரில் இந்த திருமணம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது இந்த புகைப்படம் வைபவ் மற்றும் சதீஷ் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்டதாகவும். அதை காமெடிக்காக வெளியிட யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இப்படி ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். ஏற்கனவே பைரவா படத்தின் பூஜையின் போது கீர்த்தி சுரேஷ் மற்றும் சதீஷ் இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் பரவி, இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.