Actor Little John Death : தமிழில் வெங்காயம், ஐம்புலன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணமடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள, அல்லி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தனசேகரன். செல்லமாக லிட்டில் ஜான். என அழைக்கப்படும் இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 3 அடி மட்டுமே உயரம் கொண்ட இவர் வெங்காயம், ஐம்புலன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும், கிராமங்கள் தோறும் கோவில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 

நேற்று முன்தினம் இரவு பள்ளிப்பாளையம் அருகே உள்ள மோடமங்கலம் என்கிற கிராமத்தில் மாரியம்மன் கோவில் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு தனது வீட்டில் வந்து தூங்கியவர் மீண்டும் காலையில் எழுந்திருக்கவில்லை. குடும்பத்தினர் சென்று பார்த்தபோது வாயிலும், மூக்கிலும் ரத்தம் வந்த நிலையில் இருந்ததால், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையும் படியுங்கள்... samantha : நாக சைதன்யாவுடன் தொடர்பில் இருந்த மேனேஜர்... விஷயம் தெரிஞ்சதும் வேலையை விட்டு தூக்கிய சமந்தா