comedy actor balaji issue

பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. இவர் பல முன்னணி நடிகர்களுடனும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைத்து லிங்கா படத்திலும் நடித்தவர்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் இருந்து வரும் இவர். சமீபத்தில் இந்த தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் போது, இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக விரைவிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர்கள் விலகநேரிட்டது.

இந்நிலையில் தற்போது தாடி பாலாஜியின் மனைவி நித்தியா, தன்னுடைய ஜாதியின் பெயரையும், தன்னுடைய சமூகத்தையும் குத்திக் காட்டி தாடி பாலாஜி தன்னை அடித்து கொடுமை செய்வதாக. போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த செய்தி திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த புகார் குறித்து போலீசார் தாடி பாலாஜியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.