முன்னணி ஹீரோக்களே டபுள் ஆக்ட் படத்தில் நடிக்கத் தயங்கிக்கொண்டிருக்கும்போது ட்ரிபிள் ஆக்ட் படம் ஒன்றில் நடிக்கும் துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார் காமெடியன் சந்தானம். 

முன்னணி ஹீரோக்களே டபுள் ஆக்ட் படத்தில் நடிக்கத் தயங்கிக்கொண்டிருக்கும்போது ட்ரிபிள் ஆக்ட் படம் ஒன்றில் நடிக்கும் துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார் காமெடியன் சந்தானம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

’தில்லுக்கு துட்டு 2’, ‘A1' என தொடர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்து வரும் சந்தானம், தனது நடிப்பு பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். தனது அடுத்தப் படத்திற்காக சயின்ஸ் பிக்‌ஷன் கதையோடு களம் இறங்கும் சந்தானம், அப்படத்திற்காக மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக்.

இதுவரை உள்ள சந்தானம் காமெடியில் இது தான் உச்சம், என்று சொல்லும் விதத்தில் இப்படம் உருவாக உள்ளதாம். கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். ‘அறம்’, ’குலேபகாவலி’, ’ஐரா’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ஹீரோ’, விஜய் சேதுபதி நடிப்பில் ‘க.பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும், ‘விஸ்வாசம்’ படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட்டவரும் இவர் தான். இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ்.சினிஸும் இப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். இவர், ஜெய்-அஞ்சலி நடிப்பில் வெளியான பலூன் படத்தை இயக்கியவர். 

 இப்படத்தின் தலைப்பு வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பதோடு இப்படத்தை இயக்க இருப்பவர் மிகப் பிரபலமான எழுத்தாளர் கார்த்திக் யோகி என்பதும் தான். கார்த்திக் யோகி தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்தவர். இப்படக்குழுவினர் இது மிக வித்தியாசமான கிரியேட்டிவான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தில் நிச்சயம் சந்தானத்தின் ட்ரிபிள் அவதாரம் வேற லெவலில் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். 

வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே செய்ய முடிவெடித்திருக்கும் சந்தானம் ‘பிகில்’,’தர்பார்’ஆகிய இரு படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைப்பு வந்தபோது கொஞ்சம்கூட யோசிக்காமல் நோ சொன்னது இண்டஸ்ட்ரி அறியாத ரகசியம்.